Tuesday, October 23, 2012

இயற்கை வழங்கும் அதி உன்னத உணவு ஸ்பைரூலினா


மனித உயிரையும் உடல் ஆரோக்கியத்தையும் காப்பதே உணவின் பிரதான நோக்கம். ருசியும் மணமும் இரண்டாம் தேவைகளே. ஆனால் இன்றைய நவீன வாழ்க்கைச் சூழலில் வாழ்க்கையின் அர்த்தங்களும், உணவுகளின் நோக்கமும் மாறிவிட்டன. வறுமைப் பசியாலும், கடன் தொல்லையாலும் ஏற்படும் மரணங்களை விட அளவுமீறிய ஒழுங்கற்ற ஆரோக்கியமற்ற உணவுகளால் ஏற்படும் மரணங்களே அதிகம்.
       ஸ்பைரூலினா..நமது உணவுகளில் பெரும்பகுதி கார்போ ஹைட்ரேட், இனிப்பு, அடர்கொழுப்பு (Saturated Fats) போன்ற சத்துக்களே அடங்கியிருப்பதால் எண்ணற்ற நோய்களுக்கு ஆளாகிறோம். கொலஸ்டிரால் இருதய-ரத்தநாள நோய்கள், உடல்பருமன், நீரிழிவு, மலட்டுத்தன்மை, புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்கள் முற்றுகையிடுகின்றன. இதற்குத் தீர்வு... மருத்து வமா? இல்லை... வாழ்க்கைமுறை மாற்றங்களும் சிறந்த உணவுகளும் தான் உண்மையான தீர்வு களை வழங்க முடியும்.
ஸ்பைரூலினா’...எனும் அரியஎளிய உணவு
       ‘ஸ்பைரூலினாபற்றி பலரும் கேள்விப்பட்டிருக்கக்கூடும். ஆனால் அதன் முழுமையான ஆற்றலையும், பயன்களையும் அறிந்திருந்தால் அனைவருமே மிகப்பெரும் நன்மை அடைந்திருக்க முடியும்.
        ஒரு செல் புரத பாசி வகையைச் சேர்ந்தது. (single celled Algae) அடர் பச்சை நிறமுள்ள இந்தச் சுருள்பாசியில் மிக அதிகளவில் பச்சையம் அமைந்திருப்பதாலேயே அந்நிறத்தில் உள்ளது. உலகின் வெப்பமான நீர்நிலைப் பகுதிகளில் விளையக்கூடியது. மத்திய ஆப்ரிக்கா, வட ஆப்ரிக்கா, மெக்ஸிகோ, இலங்கை, இந்தியா போன்ற இடங்களில் கடல்களில், ஏரி களில் காணப்படுகிறது.
       உலகிலுள்ள வேறு எந்த தாவர உணவுப் பொருட்களையும், இறைச்சி உணவுப் பொருட் களையும் விட அதிகளவு புரதம் (டழ்ர்ற்ங்ண்ய்) இச்சுருள்பாசியில் செறிந்துள்ளது. இது போன்ற சத்து ஆதாரமிக்க நீர்ப்பாசிகளை உணவாக உண்பதால்தான் மீன்களில் அதிகப் புரதம் அமைகிறது. விண்வெளி வீரர்களின் முக்கிய உணவாக ஸ்பைரூலினாபயன்படுகிறது. ஏனென் றால் நாம் இதை உண்ணும் அளவோ மிகக் குறைவு.. கிடைக்கும் ஆற்றலோ அளப்பரியது! Yes... Micro Food! Macro Blessing!
இயற்கை அன்னையின் ஆற்றல்மிக்க உன்னத உணவு
       ‘இயற்கையை நோக்கி நீ இரண்டடி போனால், இயற்கை உன்னை நோக்கி நான்கடி நெருங்கி வரும்என்பது உண்மையே. சோவியத் ருஷ்யாவில் செர்னோபிள் அணுஉலை விபத்தைத் தொடர்ந்து அப்பகுதியைச் சுற்றிலுமுள்ள விளைநிலங்களும் பாதிக்கப்பட்டன. விளைச்சல் நஞ்சாய் அமைந்தன. எண்ணற்ற குழந்தைகளுக்கு நச்சு உணவுகளால் ஏராளமான தோல் அலர்ஜி நோய்களும், உடல்நலச் சிக்கல்களும் ஏற்பட்டன. புழக்கத்திலிருந்த மருந்துகள் மூலம் குழந்தை களைக் காப்பாற்ற இயலாத நிலையில் இறுதியில் ஸ்பைரூலினாபரிந்துரைக்கப்பட்டது. தினமும் குழந்தைகளுக்கு இந்தக் கடற்பாசி உணவு மிகச் சிறிதளவு தொடர்ந்து வழங்கப்பட்டது. இயற்கையின் ஆச்சரியமாய் ஆறுமுதல் எட்டு வாரங்களில் குழந்தைகளின் தோல் அலர்ஜி நோய்கள் தீர்ந்தன. பெரும்பாலான நோய்களி லிருந்து அவர்கள் மீள முடிந்தது. எனவே ரஷ்யர்கள் ஸ்பைரூலினாவை மருந்துணவு’ (Medicine Food) என்கின்றனர்.
ஸ்பைரூலினாவில் அடங்கியுள்ள சத்துக்கள்
       மிகமுக்கியமாக இறைச்சியை விட 5 மடங்கு அதிகம் புரோட்டின் (உயர்தரமான தாவரவகைப் புரதம்) அடங்கியுள்ளது. காரட்டை விட 10 மடங்கு அதிகம் பீடாகரோடின் சத்து அடங்கியுள்ளது. தாய்ப்பாலில் மட்டுமே காணப்படும் காமாலினோனிக் அமிலம் (Gamma Linoleic Avid) இதில் அடங்கியுள்ளது. அமினோ அமிலங்கள் 22ல் 18 வகை இதில் உள்ளன. 10 வகை வைட்டமின்கள் குறிப்பாக யண்ற் Vit A,E,B12 போன்றவை உள்ளன. 8 வகை தாதுச் சத்துக்கள் நிறைந்துள்ளன.
ஸ்பைரூலினா’ அள்ளி வழங்கும் ஆரோக்கியம்
       நீண்ட ஆயுளையும் நிறைந்த ஆரோக்கிய மும் வழங்குவதில் முதலிடம் வகிக்கும் உன்னத உணவாக ஸ்பைரூலினாவை இயற்கை படைத்துள்ளது. நமது உணவுகளில் கார்போஹைட்ரேட், எடை அதிகரிப்பு ஏற்படுகிறது. உணவுக்கு 1மணி நேரம் முன்பு ஸ்பைரூலினா உண்பதால் பசி சீரடையும், எடை குறையும்.
       மேலும் புரதம், வைட்டமின்கள் அபரிமித மாக உள்ளதால் நோய் எதிர்பாற்றல் பெருகும். நோய் தொற்றுக்கள் நெருங்காது. இதிலுள்ள காமா லினோலிக் அமிலச் சத்து கொலஸ்டிரால் உற்பத்தியைத் தடுக்கும். கெட்ட கொலஸ்டிரால் (LDL) அளவைக் குறைக்கும் நல்ல கொலஸ்டிரால் (HDL) அளவை அதிகரிக்கும். உடல் பருமனைக் குறைக்க சிறந்தது. இருதய நோய்களைத் தடுக்கும், ரத்த அழுத்தத்தைச் சீர்படுத்தும். மேலும் காமா லினோலிக் அமிலச் சத்து சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்புப் (powerful anti inflammatory) பணியும் ஆற்றுவதால் மூட்டு அழற்சி வலியால் துயரப்படு வோருக்கு பெரும் நிவாரணியாக அமைந்துள்ளது. ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கு இனிய தீர்வுகள்
       ஸ்பைரூலினா... மனித உடலில் நிகழ்த்தும் அதிசயங்கள் ஒன்று இரண்டல்ல! ஏராளம்! ஏராளம்! சர்க்கரை நோயாளிகளுக்கு இது வரப்பிரசாதம். வெறும் வயிற்றில் ரத்த சர்க்கரை அளவை (blood sugar level in fasting) 6 முதல் 8 வாரங்களில் மிகச் சரியான அளவுக்குக் கொண்டு வருவதோடு, அடிக்கடி பசி ஏற்படுதல், அடிக்கடி உண்ண வேண்டிய நிர்பந்தம், நீரழிவு மிகுதியால் தோல் பாதிப்புகள், பாத எரிச்சல் ஏற்படுதல் போன்ற பிரச்சனைகளுக்கும் சுகமான, சுலபமான, நம்பகமான தீர்வு ஏற்படுகிறது.
Best Stomach Tonic
       ஸ்பைரூலினா... இரைப்பை மற்றும் குடல் களின் செயல்திறனை அதிகரிக்கிறது. E.coli,candida போன்ற தீய பாக்டீரியாக்களை முறியடிக்க உதவுகிறது. ஹார்மோன் இயக்கத்தைச் சமநிலைப் படுத்துகிறது.
முதுமையும் தளர்ச்சியும் தூரப் போகும்
       மனிதனை முடக்கி மரணத்தை நோக்கி விரைவாய் நகர்த்தும் சிதைவு நோய்களை (Degenerative Diseases) தடுக்கும் ஆற்றல் ஸ்பைரூலினாவில் அமைந்துள்ளது. இது உடலின் நச்சுக்களை அகற்றும் anti oxidant/antiviralagent ஆகப் பணியாற்றுகிறது. vit.b.12 அடங்கியுள்ளதால் உடல், மன அழுத்தங்கள் இறுக்கங்கள் குறைந்து சுதந்திர உணர்வு ஏற்படும். தோல் வறட்சி, தோலில் சுருக்கம், இதரதோல் நோய்களையும் முறிய டிக்கும். எப்போதும் சோர்வும் பலவீனமும் உள்ளவர்களுக்கு, (Chromic Fatique Syndrome-CFS) நீண்டகால களைப்பு நோய்க்கு மிகச் சிறந்த சிகிச்சையாக இது அமைகிறது. இதன் மூலம் புத்துணர்ச்சியும் சுறுசுறுப்பும் பெருகும். தளர்ச்சி மறையும், முதுமையைத் தள்ளிப்போடும் (Antiaging) ஆற்றல் ஸ்பைரூலினாவுக்கு உள்ளது. புற்று நோயைத் தடுக்கும் சக்தியும் (cancer fighting ingredients) இதிலுள்ளன என ஏராளமான ஆய்வுகள் மூலம் அறியமுடிகிறது.
       ‘சேதமடைந்த செல் டிஎன்ஏவின் விளைவே புற்று. இது கட்டுக்கடங்காமல பல்கிப் பெருகும். இந்நிலையில் “Endonucleus” என்ற சிறப்பு என்சைம்கள் சேதமடைந்த செல் டிஎன்ஏநிலை பெற்று செல்லைப் பாதுகாத்து வாழ்வளிக்கும். இந்த என்சைம்கள் செயல்படாத நிலையில் டிஎன்ஏசரிசெய்யப்படாமலேயே போய்விடும். புற்று வளரும். ஸ்பைரூலினா... செல்லின் நியூக்ளியஸ் என்சைம் செயலைத் தூண்டும்; அதிகப்படுத்தும். இதுகுறித்து தொடர் ஆய்வுகளி லிருந்து நம்பிக்கையளிக்கும் தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன.
ஸ்பைரூலினா
இந்த ஸ்பைரூலினா பாசியில் என்ன சத்துக்கள் இருக்கிறது என்று பார்க்கலாம்?
புரதம்-இதில் 55 முதல் 65 சதவீதம் புரதச்சத்துள்ளது. புரதம் உடல்வளர்ச்சிக்கு முக்கியமானது. ஏனைய உணவுப்பொருட்களுடன் ஒப்பிடும் போது ஸ்பைரூலினாவில் உள்ள புரதம் எளிதில் சீரணிக்கும் தன்மை கொண்டது. 

தாதுக்கள்-நமது உடல் சீராக இயங்க அவசியமான தாதுஉப்புகள் உள்ளன. இந்த தாதுஉப்புக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிக்கும். 
மக்னீசியம்- ஸ்பைரூலினாவில் தாய்ப்பால் சுரப்பதற்கு தேவையான தாதுஉப்புக்களாகிய மக்னீசியம்,கால்சியம்,பொட்டாசியம் இருப்பதால் குழந்தை பெற்ற பெண்களுக்கு அதிக அளவில் தாய்ப்பால் சுரப்பு ஏற்பட செய்யும். 
வைட்டமின் ஏ-கண்பார்வை சீராக இருக்க உதவும் வைட்டமின் ஏ மற்ற உணவு பொருட்களுடன் ஒப்பிடும் போது ஸ்பைரூலினாவில் அதிகம். 
பீட்டா கரோட்டின்-கேரட்டில் இருந்து கிடைப்பதைவிட ஸ்பைரூலினாவில் 10 மடங்கு அதிக பீட்டா கரோட்டின் உள்ளது. 
வைட்டமின் பி6-பி12- இது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் கணையங்களை சீராக செயல்பட செய்து தேவையான இன்சுலினை சுரக்க செய்கிறது. இரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. 
இரும்புச்சத்து- மற்ற உணவுகளை விட ஸ்பைரூலினாவில் 15 மடங்கு இரும்புச்சத்து உள்ளது. 
கார்போஹைட்ரேட்- இது ஸ்பைரூலினாவலிருந்து நேரடியாக நமது உடலுக்கு கிடைக்கிறது. 
காமா லினோலிக் அமிலம்-ஸ்பைரூலினாவில் இருக்கும் இந்த அமிலம் உடலின் கொழுப்புச்சத்தை உயரவிடாமல் தடுக்கிறது. இது தாய்ப்பாலுக்கு நிகரானது. இந்த சத்து நமது ரத்தக்குழாய்களில் படியும் கொழுப்புச் சத்துக்களை குறைக்கிறது. இதனால் மாரடைப்பு தடுக்கப்படுகிறது. 

தவிர இந்த பாசியில் சூப்பர் டிஸ்மியூட்டேஸ் என்ற பொருள் உடலில் இறந்த செல்களுக்கு பதிலாக புதிய செல்கள் உருவாக சிறப்பாக உதவுகின்றன. 
ஹார்வர்டு மருத்துவமனை நடத்திய ஆய்வில் இதன் பல்வேறு மருத்துவ குணங்கள் தெரியவந்துள்ளன. இதில் இருக்கும் சல்போலிப்பிட்டஸ் உடலுக்கு அபரிமிதமான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. 

அலர்ஜி எனப்படும் ஒவ்வாமை நோயை தீர்க்க எதிர்ப்புசக்தியை அளிக்கிறது. 

ஸபைரூலினாவை தினமும் இரண்டு கிராம் முதல் நான்கு கிராம் வரை உணவில் சேர்த்துக் கொள்வது நலம். 

மனிதனின் பேராசையால் இந்த உலகத்தின் மரங்களும்,நிலங்களும், ஆறுகளும்,காடுகளும் அழிக்கப்பட்டு அவனால் பெருக்கப்பட்ட மனித சந்ததிக்கான உணவின் தேவையை இயற்கையால் ஈடுகட்ட முடியாமல் போகும் போது இந்த ஸ்பைரூலினா தான் தரப்போகிறது. உணவை மாத்திரை வடிவில் தின்று தான் மனிதன் வாழப்போகிறான் என்பதே விதியாக இருக்கும். இன்றைக்கு இருக்கும் வேகத்தில் மனிதர்கள் பேராசையால் இயற்கைக்கு எதிராக எவ்வளவு வேகமாக போகிறார்களோ.....அவ்வளவு விரைவில் உணவும் இல்லாமல் போகும். அலுவலகத்திற்கு போகும் போது சாப்பாட்டு கேரியருக்கு பதில் ஸ்பைரூலினா மாத்திரைகளை பாக்கெட்டில் நிரப்பிக் கொண்டு போவார்கள், 
items in percentage 
protein 60-63%      
(3 times higher than beef, fish or pork . 6 times higher than eggs. 2 times higher than soy beans)

minerals 7-13% 
(including Calcium, Potassium, Magnesium, Zinc, Phosphorus)

fibre 8-10%
(4 times higher than flour or corn)

vitamin B12 0.2-0.3mg
( 3~4 time higher than animal liver)

beta carotene 140-330mg 
(5 time higher than carrots, 40 times higher than Spinach)

carbohydrate 15-25%
lipid 6-8 %

chlorophyll 1000-2000mg 
(more than 20 times higher than wheat grass)

calcium 130mg
(10 times higher than milk)

iron 33mg 
(65 times higher than spinach, 30 times higher than beef, 5 times higher than soy bean)


Contents of Spirulina 


* Predigested proteins 

* amino acids 

* chlorophyll 

* essential fatty acids

* gamma-linolenic acid (GLA)

* Vitamin A 

* Beta-Carotene 

* Vitamin E 

* Vitamin B complex, notably Vitamin B 12 


To be useful in the Treatment of: 


* Diabetes

* Glaucoma

* Liver pathologies

* Cancer

* Increasing neurotransmitter formation

* Acting as an appetite suppressant 

* Hair loss

*Increase Hemoglobin

தேவைப்படுவோர்   தொடர்புகொள்ள  :+91 9043778890 அல்லது bkcjem@gmail.com

No comments:

Post a Comment