Tuesday, October 23, 2012

செல்போன் கதிர்வீச்சிலிருந்து உங்களைப் பாதுகாக்க...


மொபைல் போனின் கதிர்வீச்சிலிருந்து உங்களைப் பாதுகாக்க (To protect yourself from mobile phone radiation )

நம் அன்றாட வாழ்க்கையின் இன்றியமையாத ஓர் சாதனமாக மாறிவிட்டது மொபைல்போன். எந்த ஒரு விஞ்ஞானச் சாதனமும் மனிதனுக்கு நன்மைகள் பல தந்தாலும் அதனால் ஏற்படும் ஒரு சில தீய விளைவுகளும் இருக்கத்தான் செய்கிறது . அதனால் மனிதன் ஏதேனும் ஒருவகையில் பின்விளைவுகளையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. அந்த வகையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் மொபைல் போனிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு அபாயம் குறித்து இப்பதிவில் காணலாம். 

மொபைல் பயன்படுத்துவதால் மூளையில் கேன்சர்(Brain Cancer) வரும் வாய்ப்பு அதிகம் என்று ஒரு சாராரும், இல்லை அவ்வாறான வாய்ப்புகள் மிகக்குறைவு என ஒரு சாராரும் விவாதித்து வருகிறார்கள். இது எந்தளவிற்கு உண்மை? என்பது இன்னும் ஆராய்ச்சி நிலையிலேயே இருந்துவருகிறது.

எனினும் CTIAThe Wireless Association மற்றும் Food and Drug Administration போன்ற அமைப்புகள் புற்று நோய் மொபைல் போனிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சு(Radiation) புற்றுநோயை உண்டாக்குமளவுக்கு இருப்பதில்லை என தெளிவாக கூறுகின்றனர். எனினும் இந்த செல்போனிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சிலிருந்து , அதன் பாதிப்பிலிருந்து விடுபடுவது எப்படி? தவிர்ப்பது எப்படி? என்பதையும் அதற்கான ஒரு சில வழிமுறைகளையும் காணலாம்.
·         SMS அனுப்புவதன் மூலம் போனிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சின் அளவைக் குறைக்கலாம். பேசினால்தான் அதிகம் கதர்வீச்சு வெளிப்படும் என தகவல்கள் கூறுகின்றன.
·         உங்கள் மொபைல் போனை ஸ்பீக்கர் மோடில்(Speaker mode) வைத்து இயக்குவதனால், மொபைலிலிருந்து வெளிப்படும் கதர்வீச்சு தலையை பாதிக்காதவாறு பார்த்துக்கொள்ள முடியும். அதேபோல் போனில் ஹெட்செட்(Head set) போன்றவற்றைப் பயன்படுத்திப் பேசுவதன் மூலமாகவும் தலைக்கு கதிர்வீச்சு() பாதிப்பு இல்லாமல் தவிர்க்க முடியும்.
·         மொபைல் போனில் டெக்ஸ்ட்(Text) அனுப்பும்போதும், நாம் பேசும் போதும் அதிகம் கதிர்வீச்சு இருக்கும். ஆனால் Incomming call கள் வரும்போது கதிர்வீச்சு குறைவாக இருக்கும்.
·         உங்கள் மொபைல் போனுக்கு வரும் சிக்னல்களை நீங்கள் பயன்படுத்தும் மொபைல் மூடிகள்(Mobile caps), பிளாஸ்டிக் உறைகள்(Plastic envelopes) போன்றவைகள் செல்போனிற்கு வரும் சிக்னல்களைத் தடுப்பதால், சிக்னல்களைத் தெளிவாகப் பெறவேண்டி உங்கள் மொபைல்போன் அதிக கதிர்வீச்சினை அனுப்புகிறது. இத்தகைய மூடிகளைப் பயன்படுத்தாமலிருந்தாலே ஓரளவிற்கு கதிர்வீச்சு உருவவாவதை தவிர்க்க முடியும்.
·         Radiation Protection Card போன்றவற்றையும் கதிர்வீச்சைத் தடுக்கப் பயன்படுத்தலாம்.
·         குறைவான சிக்னல் கிடைக்கும்போது பேசாமல் இருப்பது நல்லது. குறைவான சிக்னலில் இருக்கும்போது பேசினால் போனிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு இருமடங்கு அதிகமாகிறது என்கின்றனர். எனவே சிக்னல் அதிகம் கிடைக்காமல் இருக்கும் பகுதிகளில் பேசாமல் இருப்பதே நல்லது.

·         பெரியவர்கள் மற்றும் சிறுவர்களென்றாலே சாதாரண நோய்களும் தாக்கும் அபாயம் உண்டு. காரணம் இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால்தான். இந்த செல்போன் கதிர்வீச்சும் இவர்களை அதிகம் பாதிப்பதாக தகவல்கள் கூறுகின்றன. எனவே குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் கையில் விளையாட்டாக கூட செல்போனை இயக்கிக் கொடுக்கவேண்டாம்.

உங்கள் மொபைல் போனின் கதிர்வீச்சு மற்றும் அபாய தன்மையினை அறிந்துகொள்ள

உங்கள் மொபைல் போனில் உள்ள பேட்டரியின் அடிப்பகுதியில் Federal Communications Commission (FCC) எண் குறிக்கப்பட்டிருக்கும். அந்த எண்ணை எப்.சி.சி FCC இணையதளத்தில் கொடுத்து உங்கள் போனில் கதிர்வீச்சுத் தன்மையை அறிந்துகொள்ளலாம்.
நண்பர்களே வணக்கம், செல்போன் தொழில் நுட்ப சாதனங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது. இதனால் தேவைகள் மட்டும் அல்லாமல் இதனால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகரித்து கொண்டே தான் போகின்றன என்கின்றது ஆய்வு முடிவுகள். செல்போன்களை எப்படி கையாள வேண்டும் என்பதை தெரிந்து கொண்டாலே பல பாதிப்புகளை
தவிர்க்கலாம்.

ஆம்! குழந்தைகள் பெரியவர்களைவிட செல்போன்களை மிக எளிதாக பயன்படுத்துவதை பார்த்து பெருமை கொள்ளும் பெற்றோர்கள் நிச்சயம் ஒரு முக்கியமான விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், செல்போனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு வெகு அதிகமாக குழந்தைகளை பாதிக்கும். 

முடிந்த வரை லேண்ட்லைனை பயன்படுத்துவது நல்லது என்று தான் சொல்ல வேண்டும். அப்படியே செல்போனை பயன்படுத்தினாலும் முக்கிய தேவைகளுக்கு பயன்படுத்துவது நல்லது. சில கிராமப்புற பகுதிகளில் சரியாக நெட்வொர்க் கிடைப்பதில்லை. இது போன்று சரியாக சிக்னல் கிடைக்காத பகுதிகளில் செல்போன் பயன்படுத்தும் போது, கதிர்வீச்சின் பாதிப்பு அதிகம் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.

அதோடு தூங்கும் போது செல்போனை பக்கத்திலேயே வைத்து கொண்டு தூங்குபவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். இந்த பழக்கத்தினை ஆரம்ப காலத்திலேயே தவிர்த்து கொள்வது சரியான ஒன்று. மற்றவர்களுக்கு பேசும் போது, எதிர் முனையில் பேசுபவர்கள் அழைப்பை எடுத்த பின், காதில் வைத்து பேசுவது நல்லது. ஏனெனில் பேசும் போது ஏற்படும்
கதிர்வீச்சைவிட, ரிங்டோன் போகும் பொழுது 14 மடங்கு அதிகம் கதிரவீச்சுகள் வெளிப்படுகிறது.

முக்கியமாக வைப்ரேட் மோடில் செல்போனை வைத்திருப்பதை தவிர்க்கவும். இது போன்று வைப்ரேட் மோடில் வைத்து, சட்டை பாக்கெட்டில் வைத்திருப்பதால் இதன் மூலம் ஏற்படும் அதிர்வலைகள் அதிகம் தாக்குகின்றன. 

பொதுவாக வலது காதில் வைத்து மொபைல் பேசும் போது மூளை நேரடியாக பாதிக்கும். இதனால் இடது பக்க காதில் வைத்து பேசினால் இதன் பாதிப்பை குறைக்கலாம். பயணங்களில் பொழுதுபோக்காக நிறைய பேர் கேம்கள் விளையாடுவது வழக்கம். இப்படி பயணங்களில் உற்றுபார்த்து ஒரு வேலையை செய்வதன் மூலம் கண்கள் எளிதாக பாதிக்கப்படும்.

இப்படி விளையாட்டாகவும், கவன குறைவாகவும் செய்யும் சில வேலைகளை குறைத்தாலே செல்போன்கள் மூலம் ஏற்படும் பெரிய பாதிப்புகளை ஓரளவு குறைக்க முடியும்.

மொபைல் போனின் கதிர்வீச்சிலிருந்து உங்களைப் பாதுகாக்க தேவையான SHINE பாதுகாப்பு   ஸ்டிக்கர்(SHINE Radiation Protection Card)  
தேவைக்கு தொடர்புகொள்ள +91 9043778890 OR bkcjem@gmail.com

No comments:

Post a Comment