Saturday, December 8, 2012

பயணம்

                                         

     வாருங்கள் நாம் அனைவரும்  பயணத்தை பற்றி பயணம் சென்று வருவோம் நாம் அனைவரும் இந்த உலகத்தில் பயணிகள் இதை பல முறை கேட்டுள்ளோம் ஆனால் என்ன பயணம் செய்து கொண்டு இருக்கின்றோம் உண்மையான பயணம் எது இதையெல்லாம்  பற்றிஅறிந்து உள்ளோமா ?பயணம் இதன் பரிணாமம் என்ன ? எத்தனை விதமான பயணம் உள்ளது ? வாருங்கள் பார்போம்   பயணம் என்றாலே ஒரு நிலையில் இருந்து  மற்றொரு நிலைக்கு செல்வது இதில் முக்கியமாக 3 விதமான பயணம் உள்ளது. 

1.உடல் ரீதியான பயணம் ;

   யதார்த்தமாக இதைப் பற்றி அறிந்து உள்ளோம் .ஸ்துலமாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு  செல்வது அதில் அலுவல்,வியாபாரம் ,பொழுது  போக்கு  மற்றும் தீர்த்த யாத்திரை.  தீர்த்த யாத்திரை மற்றும் ஆன்மிக யாத்திரை இரண்டிற்கும்  மிக  அதிக  வேறுபாடுகள் உள்ளது.அதைப்பற்றி பிறகு பார்ப்போம் .அதற்கான  பயணத்தின்  விதி  என்ன ?.
                                                               1.தயாராகுதல் .    2.நியமங்களை  கடை பிடித்தல் .
                     இதில்  உடல் ரிதியான  பயணத்தில் அதிகம்  தயாராகுதல் தான் சில தீர்த்தயாத்திரைக்கு  மட்டும் தான் நியமங்களை  கடைபிடிக்கின்றோம் .[உ .ம் ]  [சபரிமலை  யாத்திரை .]  பொழுது  போக்கு  மற்றும் வியாபார பயணத்தில்  மற்ற நாடு அல்லது இடகளுக்கு  செல்லும் போது  அந்த இடத்திற்கு     உரிய நியமங்களை கடைபிடிக்க வேண்டிஉள்ளது.

 2.ஆன்மாவின் பயணம்;           

       பயணம் துவங்கும் முன் ஆன்மா என்றால் என்ன.?அது எங்கு உள்ளது.?
ஆன்மா இந்த வார்த்தை கேட்ட உடன்  நம்மில் பெறும்பலனோர்  உயிர் என்று  அறிந்து  உள்ளோம்.உயிர்    என்றால் என்ன ?இதை பார்க்கும் முன்  முதலில்  ஒரு  கேள்வியை தனக்கு தானே  கேட்டு பார்போம் . நான் யார் ? மனதில் ஏத்தனை விதமான பதில்கள் உதிக்கின்றது   .நம்முடைய  பெயர் ,இந்த  ஊரை சேர்ந்தவன் ,இன்னருடைய  மகன் ,ஆண் ,  பெண் ,இந்த பதவியில்  இருப்பவர், படித்தவன் ,பணக்காரன்  எத்தனை  விதமாக உதிக்கின்றது .அத்தனை பதில்களும் நான் என்ற உடன்  என்ன  நினைவுக்கு வந்தது. இந்த உடல் தானே? 
இந்த உடல் தான் நான் என்றால் மனதில் சில கேள்விகள்  எழுகின்றதே ?

No comments:

Post a Comment