Monday, February 11, 2013

நாம் எவ்வளவு பெரிய புத்திசாலிகள் ?

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றோரெல்லாம்
தொழுதுண்டு பின் செல்வர்            

அன்பிற்குரிய சகோதர,சகோதரிகளே மேற்கூறிய குறளில் நம் முப்பாட்டனாகிய  வள்ளுவன்  கூறியதை விட மிக அருமையாக வேறு யாரும் விவசாயத்தை பற்றி கூற முடியாது
உயிர் வாழ எந்த அளவு மூச்சுக்காற்று அவசியமோ அந்த அளவு       விவசாயமும் முக்கியம்மூச்சுக்காற்றே  விவசாயம  விவசாயமே  மூச்சுக்காற்று.ஆனால் இன்றோ  விவசாயமும்  விவசாயிம் எந்த  நிலையில்  இருக்கின்றார்கள் நமக்கு தெரியும் விவசாயம் என்ற   தொழிலேயில்லை எனலாம்
அதன்  பின்னணி   என்ன  அதனால்  ஏற்பட்ட ஏற்பட போகும்   எதிர்விளைவுகள் என்ன ?   சற்றே சிந்திப்போம் 
உலகத்திற்கே   ஆன்மிகம்,அறிவியல்,விவசாயம்,கல்வி,கலவி, கலாச்சாரம்,வியாபாரம்,வீரம்,காதல்,தொழில்நுட்பம்,இலக்கியம் என்று அனைத்திலும் உலகத்திற்கே முன்னோடிகளாகவும்  உதாரணபுருசர்களாகவும் திகழ்ந்த தேசம் உதாரணத்திற்கு  ரைட் பிரதர்ஸ்  விமானத்தை  கண்டுபிடிப்பதற்கு முன் ஏன் இன்றும் கண்டுபிடிக்காத  எண்ணஅலைகளினால் இயக்ககூடிய விமானத்தை இயக்கிய   காலமும்,கலையும்,கதையும் இங்கே ஏராளம் ஆனால் அப்படிபட்ட  அனைத்தையும்  தொலைத்துவிட்டோம் இல்லை இல்லவேயில்லை  மாற்றானின் பேச்சை கேட்டு நம்மிடமிருந்த அற்புதமான வைரங்களை  குப்பையில் வீசிவிட்டோம் அதில் ஒன்று தான்  நம் தேசத்திற்கே  உரிய  விவசாயமுறை அதை குப்பையில் வீசிவிட்டு இன்றோ ஒன்றுக்கும்  ஆகாத குப்பையான மேல்நாட்டு  ரசாயன  விவசாயமுறையை நமதாக்கிகொண்டோம் காலில் இடரும் கல்லிற்கு வைரத்தையே மாற்று பண்டமாக கொடுத்துவிட்டு அதையே கவுரமாகவும் பெருமையாகவும் நினைக்கின்றோம்
   
நாம் எவ்வளவு பெரிய புத்திசாலிகள் ?
ஏன் இப்படி ஆனது இதன் பின்னணி என்ன ?
நம் நாடு பல்லாயிரம் வருடங்களாக பல சிறு சிறு நாடுகளாகவோ அல்லது பேரசுகளாகவோ யுத்தம் எத்தனை நடைபெற்ற போதிலும் எத்தனையோ அந்நிய  படையெடுப்பு  நிகழ்ந்த போதிலும் கட்டுக்குலையாமல் இருந்த இரு பெரும் விஷயங்கள் 1.விவசாயம் 2.கல்விமுறை .இதன் காரணத்தினால் எத்தனை அந்நிய படையெடுப்பு நடந்தாலும் சிறிது காலத்திலேயே அவர்கள் விரட்டபட்டனர் அல்லது இந்த தேசத்தோடு ஒன்றிவிட்டனர் உ.ம்:கிரேக்கர்கள் ,பார்சி ,கான் .இனத்தவர்கள் இதன் காரணத்தினால் உலகத்திற்கே நம் பாரத தேசம் ஒரு சொர்க்க பூமியாக கனவுதேசமாக இருந்தது மேலும் உலகத்தின் முதன்மை தேசமாகவும் விளங்கியது சுதந்திர தென்றல் இனிமையாக வீசி கொண்டு இருந்தது ஆனால் எப்பொழுது பரங்கியர்கள் எனும் வெள்ளைத்தோல் நரிகள் இந்த தேசத்திற்குள் நுழைந்ததோ அப்போது வியாபார நோக்கோடு வந்தாக நினைத்து கொண்டு இருக்கின்றோம். உண்மை அது அல்ல காரணம் அதற்க்கு முன்பே பல நாடுகளை அடிமைகளாக மாற்றி இருந்தனர் மேலும் பாரதத்தை அடிமைபடுத்த வியாபாரம் என்று வந்தனர் .பின் மெதுமெதுவாக நம் வீட்டு பங்காளி சண்டையை பயன் படுத்தி அடிமையாக்க முயன்றனர் ஆனால் 18ம் நுற்றாண்டு வரை அதன் எண்ணம் நிறைவேறவில்லை காரணம் நம்மிடமிருந்த பலமான கல்விமுறையும் ,விவசாயமுறையும்  இதன் காரணத்தினால் இந்தியரை சுலபமாக அடிமைபடுத்த முடியவில்லை எனவே அதன் காரணத்தை ஆராய மெக்காலே மற்றும் மாக்ஸ்முல்லர் என்ற இரு பாதிரிகளை இந்தியா அனுப்பியது ஆங்கிலேய அரசு இந்தியா வந்த இருவரும் பாரதத்தின் நான்குபுறமும் சுற்றி ஆங்கிலேய அரசுக்கு அறிக்கை ஒன்றை அளித்தனர் அதுதான் பாரதத்தின் கல்விமுறையும் விவசாயமுறையும் மிகபலமாக உள்ளது அதனை உடைத்துவிட்டால் மிகஎளிதாக இந்தியாவை அடிமை படுத்தமுடியும் ஒருவேளை அரசியல் சுதந்திரம் கொடுக்கநேர்ந்தாலும் மறைமுகமாக அனைத்து வழிகளிலும் நமக்கு அடிமைகளாகவே இருப்பார்கள் அதன்பிறகு நம்மை பல நூறு ஆண்டுகளுக்கு நவீன அடிமைக்களாக வைத்திருக்க செய்த திட்டம் தான் மெக்காலே கல்வி திட்டம் மற்றும் நவீன வேளாண்மை என்ற இன்றைய ரசாயன விவசாயமும் மெக்காலே கல்வியினால் நாம் எவ்வளவு பாதிக்கபட்டு உள்ளோம். அதன் விளைவு மற்றும் நவீன அடிமைத்தனத்திலிருந்து விடுபட நாம் செய்ய வேண்டியவை?
 இப்போது நவீன ரசாயன வேளாண்மை பற்றி சற்றே பயணிப்போம்   இதன் பாதிப்புகள் குறித்தும் பார்ப்போம் உணவே மருந்து என்று வாழ்ந்த நாம் இன்று அலோபதி மருந்துகளே உணவாக உண்கின்றோம் அதன் பலவித விசதன்மைகளை உடலுக்கு கொடுக்கின்றோம் விவசாயமும் ஆங்கிலேயன் உடையது மருத்துவமும் ஆங்கிலேயன் உடையது அதாவது பலவிதமான நோய்களை ஏற்படுத்தும் உணவு பொருட்கள் ,நிலம் சக்தியற்று நஞ்சையும் புஞ்சையும் ஒன்றும் விளைவதற்கு தகுதியற்ற கட்டாந்தரைகளாக மாறிவிட்டது அதனால் நிலம் கெடுவது மட்டும் இன்றி நீரையும் கெடுக்கின்றோம்
குறைந்த நீரில் அதிக விவசாயம் பார்த்த நாம் இன்று அதிக நீரில் குறைந்த விவசாயம் பார்க்கின்றோம் அதனால் விவசாயத்தில் நஷ்டம் .உழுதவன் கணக்கு உலக்கு தான் மிச்சம் என்ற சொலவடை அதன் காரணத்தினால் நீருக்காக உள்நாட்டிலேயே பிரச்சனைகள் ,பல ஆயிரம் விவசாயிகள் தற்கொலை ,எலிக்கறி சாப்பாடு
இதன் காரணம் நம்முடைய விவசாயமுறை மறந்தது

இன்றைய விவசாயமுறை
முதலில் உழுகின்றபோது எந்த ஒரு செடியோ தானியத்தின் அடிகதிரையும் விடாமல் பிடுங்கிவிடுகின்றோம் அல்லது தீயிட்டு சாம்பலாக்கிவிடுகின்றோம் மேலும் ரசாயன உரங்களையும் ,பூச்சி கொல்லி மருந்துகளையும் விதை பருவத்திலேயே உபயோக்கின்றோம் .மேலும் நிலம்,சூழ்நிலைகளுக்கு ஏற்ற பயிராய் விதைக்காமல் பணப்பயிர் என்று  நிலம்,சூழ்நிலைகளுக்கு தகாத பயிர்களை பயிர் இடுகின்றோம் உ.ம் பருத்தி விளையும் இடத்தில் ஆப்பிள் . ஆப்பிள் விளையும் இடத்தில் பருத்தி
இவைகளினால் எத்தனை பிரச்சனைகள் முதல் பிரச்சனை உழுகின்றபோது எந்த ஒரு செடியோ தானியத்தின் அடிகதிரையும் விடாமல் பிடுங்கிவிடுதல் அல்லது தீயிட்டு சாம்பலாக்கிவிடுதல் இதற்கான தீர்வு பழைய முறைப்படி மேலே மனிதனுக்கு நடுவே கால்நடைகளுக்கு கீழ்பகுதி மண்ணிற்கு அதாவது மேலே விளையும் பயிர் மனிதனுக்கு நடுவே இருக்கும் தண்டு பகுதி கால்நடைகளுக்கு கீழ் இருக்கும் அதாவது தரையின் கீழ் மற்றும் ,மேலே ஒரு அடி வரை இருக்கும் தண்டு பகுதி மண்ணிற்கு அதாவது உழுகின்றபோது அடிபகுதியை அப்படியே மண்ணிற்குள் இரண்டு அடி வரை போகுமாறு உழவேண்டும் இதன் காரணத்தினால் பயிர் வளர வளர தழைச்சத்து கிடைக்கும் மேலும் அதிக நீர் தேவைபடாது
இரண்டாவது ரசாயன உரங்களையும் ,பூச்சி கொல்லி மருந்துகளை விதை பருவத்திலேயே உபயோகிப்பது இதனால் மண் & தாவரத்திற்கு அதிக வெப்பம் ஏற்படுகின்றது அதை சமன் செய்ய அதிக நீர் தேவைபடுகின்றது மேலும் மண் & தாவரத்திற்கு உதவும் நுண்உயிர்களை அழிக்கின்றது, மண்ணை சத்தற்ற மலடாக மாற்றுகின்றது இதற்கு பதிலாக நம்முடைய பழைய முறைப்படி சாணம் ,சாம்பல் மற்றும் பஞ்சகாவியம் போன்றவைகளை உபயோகிப்பது இதனால் மண் மற்றும் தாவரங்கள் குளிர்ச்சியாக இருப்பதால் அதிக நீர் தேவை இல்லை மேலும் மண் & தாவரத்திற்கு உதவும் நுண்உயிர்களை உருவாக்குகின்றது மண்ணை சத்தான பூமியாக மாற்றுகின்றது
நிலம் ,சூழ்நிலைகளுக்கு ஏற்ற பயிராய் விதைத்தல் உ.ம். கம்பு ,திணை,கேழ்வரகு சோளம் ,இப்படி எண்ணற்ற நம் நாட்டு பயிர்களை பயிர் இடுதல்.மேலும் கூட்டுவிவசாயம் , கூட்டுவிவசாய சந்தை முறைகள் மூலம் விவசாயம் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கைமுறையும் மேம்படுத்தமுடியும்



No comments:

Post a Comment